தன்னுடைய மகள்
ஒருவரை காதலித்து வருவதை அறிந்த தந்தை மகளை வீட்டுக்காவலில் வைத்துள்ள நிலையில் விருப்பத்திற்கு
மாறாக அடைத்து வைத்துள்ள அந்த பெண்ணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த கோரி அந்த பெண்ணின்
காதலனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு நீதிப் பேராணை மனு அனுமதித்து பெற்றோர் பாதுகாப்பில் உள்ள காதலியை , அவரது விருப்பம் போல் இருப்பதற்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பெற்றோர் காவலில்
வைக்கப்பட்டுள்ள 19 வயது உடைய சுமையை என்ற பெண், அவரது விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக
இருப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்கிறது. அந்தப் பெண் உரிய வயதை அடைந்துள்ள ஒரு பெண்
என்பதால் , அவர் தன்னுடைய விருப்பம் போல் எந்த முடிவையும் எடுப்பதற்கு தகுதியுடையவர்
என்று நீதிமன்றம் கருதுவதால், அது குறித்து எந்த அறிவுறுத்தலோ, வழிகாட்டுதலையோ அளிக்க
வேண்டிய அவசியம் இல்லை.
மேற்கண்டவாறு
குறிப்பிட்டுள்ள ஆட்கொணர்வு நீதிப் பேராணை மனுவை அனுமதித்து பெற்றோர் பாதுகாப்பில்
உள்ள சுமையாவை , அவரது விருப்பம் போல் இருப்பதற்கு அனுமதி அளித்து மாண்புமிகு நீதி
அரசர்கள் எம். வேணுகோபால் மற்றும் ஆர். ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment