Monday, 29 April 2019

கலப்பு திருமணத்தில் பிறந்த குழந்தைக்கு தாயின் ஜாதியை பயன்படுத்தலாம்: மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

‘கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு, தாயாரின் ஜாதியை பயன்படுத்தலாம்’ என்ற பரபரப்பான தீர்ப்பை மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவு வழங்கி இருக்கிறது. மகாராஷ்டிராவை சேர்ந்த அஞ்சால் பட்வாய்க் (19) என்ற எம்பிபிஎஸ் மாணவி, தனது தந்தையின் ஜாதிக்கு பதிலாக தாயாரின் ஜாதி பெயரை பயன்படுத்த அனுமதிக் கோரி மாவட்ட ஜாதி சரிபார்ப்பு கமிட்டியிடம் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், தந்தையின் ஜாதியை வைத்தே மாணவியின் ஜாதியை முடிவு செய்ய முடியும் என்று கமிட்டி கூறியது. இதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் அஞ்சால் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நீதிபதிகள் சுனில் சுக்ரே, புஷ்பா கனேடிவாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்து நீதிபதிகள் நேற்று அளித்த , வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில், “இந்தியாவில் ஆணாதிக்க சமூக அமைப்பு முறை உள்ளது. இப்போது நிலைமை மாறி வருகிறது. நமது அரசமைப்பு சட்டம் கூட சமத்துவம், நீதி மற்றும் சகோதரத்துவம் அடிப்படையில்தான் உள்ளது.

No comments:

Post a Comment

நில அனுபவ உரிமை என்றால் ?

வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின் உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந...