Tuesday, 24 September 2019

நில அனுபவ உரிமை என்றால் ?

வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின் உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந்த சொத்தின் மீது ஏற்படும் உரிமை/பாத்தியதையே அனுபவ பாத்தியதை ஆகும். தனிநபர் சொத்தினை பொறுத்து அனுபவ பாத்தியதை கோர பன்னிரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சுவாதீன அனுபவம் தேவை. அரசாங்க சொத்துக்களின் மீது இந்த உரிமை கோர 30 ஆண்டுகள் தேவை. தங்களது அனுமதியின் பேரில் குத்தகைதாரராக சொத்தின் அனுபவத்தில் உள்ளவர் எந்த காலத்திலும் அனுபவ பாத்தியதை உரிமை கோர முடியாது. குத்தகைதாரரை வெளியேற்ற நீங்கள் நீதிமன்றத்தை நாடலாம்.

No comments:

Post a Comment

வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம்மதுரை உயர்நீதிமன்றக் கிளை

வழக்குகளை விரைவாக தீர்க்க புதிய திட்டம்  மதுரை உயர்நீதிமன்றக் கிளை யானது, கிரிமினல் வழக்குகளின் தேக்கத்தைக் குறைப்பதற்காக, தானாகவே (suo motu...