ஒரு முன்னாள் மனைவி (விவாகரத்து பெற்றவர்) தனது முன்னாள் கணவனுக்கு எதிராக குடும்ப வன்முறை சட்டம் (DVC) கீழ் மனு தாக்கல் செய்யலாமா ?
"ஆம்", ஆனால் சில நிபந்தனைகளுடன்.
1. விவாகரத்துக்குப் பிறகு DVC மனு தாக்கல் செய்யலாமா?
- பொதுவான விதி: குடும்ப வன்முறை சட்டம் (2005) படி, ஒரு பெண் "குடும்ப உறவு"இருந்த எந்த ஒரு நபருக்கும் எதிராக (கணவன், முன்னாள் கணவன், உறவினர்) மனு தாக்கல் செய்யலாம். விவாகரத்து ஆன பிறகும், திருமண காலத்தில் நடந்த வன்முறை அல்லது அதன் தொடர்ச்சிக்காக வழக்கு தொடர முடியும்.
- நீதிமன்ற தீர்ப்புகள்
- உச்ச நீதிமன்றம் (Juveria Abdul Majid Patni v. Atif Iqbal Mansoori*, 2014) விவாகரத்துக்குப் பிறகும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு உத்தரவு, இழப்பீடு போன்றவை கேட்கலாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
- ஆனால், கேரள உயர் நீதிமன்றம் (2025) போன்ற சில நீதிமன்றங்கள், விவாகரத்துக்குப் பிறகு வசிக்கும் உத்தரவு (Section 19) கோர முடியாது என்று தடை விதித்துள்ளது.
2. எந்த உதவிகளை கோரலாம்?
- பாதுகாப்பு உத்தரவு (Section 18) முன்னாள் கணவன் தொந்தரவு செய்யாமல் தடுக்க உத்தரவு.
-பண உதவி (Section 20)
மருத்துவ செலவு, வாழ்க்கைச் செலவு போன்றவற்றிற்கான இழப்பீடு.
-குழந்தை பராமரிப்பு (Section 21)குழந்தைகளுக்கான தற்காலிக பராமரிப்பு உத்தரவு.
- வசிக்கும் உத்தரவு (Section 19) சில நீதிமன்றங்கள் இதை மறுக்கலாம்.
3. முக்கியமான குறிப்புகள்- ஆதாரம் முக்கியம்: மருத்துவ ரிப்போர்ட், போலீஸ் புகார், சாட்சியங்கள் போன்றவை இருந்தால் வழக்கு வலுவாக இருக்கும்.
- கால அவகாசம்: விவாகரத்துக்குப் பிறகு நீண்ட காலம் கழித்து மனு தாக்கல் செய்தால், சவால்கள் ஏற்படலாம்.
- மாநில வாரியான வேறுபாடுகள: சில உயர் நீதிமன்றங்கள் இதை ஆதரிக்கும், சில மறுக்கும்.
ஆதாரங்களைத் திரட்டவும் – மருத்துவ ரிசிட், மெசேஜ்கள், சாட்சிகள் போன்றவற்றை சேகரிக்கவும்.
மாற்று உதவிகள் – குடும்ப வன்முறை சட்டத்துடன், CrPC Section 125(பராமரிப்பு) அல்லது குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
விவாகரத்துக்குப் பிறகும் DVC மனு தாக்கல் செய்யலாம், ஆனால் சில உத்தரவுகள் (வீட்டு உத்தரவு) கிடைக்காமல் போகலாம். உங்கள் வழக்கு வலுவாக இருந்தால், நீதிமன்றம் நிச்சயம் நியாயம் வழங்கும்.
Tamil Translation by
V.R.Saravanan,
Advocate
Puducherry
Cell:- 9994854777
Advocate
Puducherry
Cell:- 9994854777
No comments:
Post a Comment