வாழ்க்கைத் துணை உறவுகள்(Live-in-relationship) மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது: அலகாபாத் உயர்நீதிமன்றம்
Article by V R Saravanan, Advocate, Puducherry, Cell: 9994854777
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் கருத்து "வாழ்க்கைத் துணை உறவுகள் (Live-in-relationship) முறிந்துபோகும்போது ஒரு பெண்ணுக்கு விகிதாசாரமற்ற முறையில் தீங்கு விளைவிக்கிறது. ஏனெனில், ஒரு ஆண் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் ஒரு பெண் உறவு முறிந்த பிறகு வாழ்க்கைத் துணையை கண்டுபிடிப்பது கடினம்" என்று கூறப்பட்டுள்ளது.
நீதிபதி சித்தார்த் அடங்கிய ஒரு தனி நீதிபதி அமர்வு, வாழ்க்கைத் துணை(Live-in-relationship) வழக்குகளின் அதிகரித்து வரும் எண்ணிக்கை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை உறவுகள் பற்றிய கருத்து, ஒரு ஆண் Live-in-relationshipக்கு பிறகு ஒரு பெண்ணை மணக்க முடியும், ஆனால் பெண்களின் அது பெண்களின் வாழ்வில் எளிதல்ல.
"வாழ்க்கைத் துணை உறவுகளை உச்ச நீதிமன்றத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட்டாலும், இந்திய மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது என்பதால் இந்த வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருகின்றன" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
ஷேன் ஆலம் என்ற குற்றம் சாட்டப்பட்டவரின் ஜாமீன் மனுவை விசாரிக்கும் போது நீதிமன்றம் இந்த கருத்துக்களைத் தெரிவித்தது. இவர் திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதியின் பேரில் ஒரு பெண்ணுடன் உடல் உறவில் ஈடுபட்டதாக BNS மற்றும் POCSO சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றம் ஜூன் 24 அன்று குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கியது.
No comments:
Post a Comment