Thursday, 2 May 2019

காடுகளிலிருந்து பழங்குடிகள் வெளியேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் 11 லட்சம் பழங்குடிகளை வெளியேற்றுவது தொடர்பான தீர்ப்பை  தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிப்ரவரி 13-ம் தேதி இந்தியா முழுவதும்  காடுகளில் வசிக்கும், பட்டா இல்லாத 11,27,446 ஆதிவாசி பழங்குடி மக்கள் வெளியேற்றப்பட வேண்டும்  என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்ஹா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பழங்குடி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுவை மத்திய அரசு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில் மத்திய அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனு  நீதிபதிகள் அருண் மிஸ்ரா, நவின் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (வியாழக்கிமை) விசாரணைக்கு வந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மனுவை ஏற்றுக்கொண்டு, பழங்குடிகள் வெளியேற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பான விசாரணை வரும் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நில அனுபவ உரிமை என்றால் ?

வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின் உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந...