Thursday, 9 May 2019

துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் அறிவுரைப்படியே துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும், மேலும் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் கிடையாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 27.01.2017 மற்றும் 16.06.2017 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சகம் துணைநிலை ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் உள்ளது என்றும்புதுச்சேரி யூனியன்பிரதேச அரசின் நடவடிக்கைகளில் நேரடியாக ஆவணங்களை கோரவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவை பிறப்பித்தது

தீர்ப்பு என்ன சொல்கிறது?

புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு அனைத்து விஷயங்களிலும் பொருத்தமான சட்டம் இயற்ற முழு உரிமை உள்ளதுயூனியன் பிரதேச சட்டம் மற்றும் இந்தியஅரசியலமைப்பு சட்டம் பிரிவு 239A, 239B, 240 மற்றும் 254 ஆகியவற்றில் கூறியுள்ள படி பொதுப்பட்டியலில் விஷயங்களிலும் சட்டம் இயற்ற உரிமை உள்ளதுஇருப்பினும்இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு 146 குறிப்பிட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசியலமைப்பு சட்டத்தின் 287, 288 மற்றும் 304 ஆகிய பிரிவுகளில் ஜனாதிபதிஒப்புதலுடன் சட்டமியற்றலாம்.

புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டமன்றம் என்பது அது மாநில சட்டமன்றமாக இல்லாத போதும்அச்சட்டமன்றம் “மாநில சட்டமன்றத்திற்கு நிகரான அதிகாரத்தைபெற்றுள்ளது”பிரதேச நிர்வாகி அல்லது துணைநிலை ஆளுநர் யின் அதிகாரம் எப்போது செயல்படுத்த முடியுமெனில் அது சட்டமன்றம் செயல்படாத நேரத்திலும்அல்லது ஒரு சில குறிப்பிட்ட தருணங்களில் அவசியமென்று தேவைப்பட்டால் அந்த விஷயங்களில் உதவிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேச சட்டம், 1962 இன் கீழ் ஒரு சட்டமன்றத்திற்கு சட்டத்தை இயற்ற அதிகாரம் அளித்துள்ளதுஇதில் பிரதேச நிர்வாகி அல்லது துணைநிலை ஆளுநர்என்பவர் அமைச்சரவைக்கு உதவி செய்யவும்ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே அதிகாரம் அளித்துள்ளதுதுணைநிலை ஆளுநருக்கு அரசு மேற்கொள்ளும் சிலஅடிப்படை தலையீடுகளில் மாறுபட்ட வித்தியாசங்கள் கண்ட போதிலும் அமைச்சரவை முடிவிற்கு ஒத்துழைக்க வேண்டும்அமைச்சரவை மூலம் கவனமாகநிறைவேற்றப்படுகின்ற சட்டபூர்வ மற்றும் உத்தரவாத கொள்கை முடிவுகளில் துணைநிலை ஆளுநர் தலையிடக்கூடாது.  புதுச்சேரி அரசு விதிகள் சட்டம், 1963ல் பிரிவு 9மற்றும் 10 கீழ் அமைச்சரவை முன்மொழிய கூடிய திட்டங்கள் அல்லது தீர்மானங்களை முதலமைச்சர் மூலம் எடுத்து செல்ல வேண்டுமென்று கூறப்பட்டுள்ளதுபிரிவு‘56’ கீழ் அத்திட்டம் ஜனாதிபதி அல்லது மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்எந்த ஒரு மசோதாவையும் விளக்கம் கேட்டும் அதை துணைநிலை ஆளுநர் ரத்துசெய்ய முடியாது.

யூனியன் பிரதேச சட்டம் மற்றும் புதுச்சேரி அரசு விதிகள் சட்டம்,1963 இன் கீழ் நிதி விஷயங்களில் அமைச்சரவைக்கும் நிதித் துறைக்கு மட்டுமே முடிவு எடுக்கும்அதிகாரம் உள்ளதுநிதி சம்பந்தமான விஷயங்களில் பிரதேச பிரதிநிதிகளாக துணைநிலை ஆளுநர் மற்றும் அமைச்சரவைக்கு மத்திய அரசாங்கம் அதிகாரம்வழங்கிய போதிலும் மக்களின் நலனைக் கருதியே அவர்கள் செயல்பட வேண்டும்இவர்களில் பிரதிநித்துவம் பெறாத சூழ்நிலையில் மத்திய அரசாங்கம் ஜனாதிபதிமூலம் தலையிடும்.

ஒவ்வொரு துறைக்கும் தேவையான நிதி ஆதாரங்களை சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலம் மத்திய நிதி அமைச்சகத்திற்கு ஒப்புக்கு அனுப்ப வேண்டும்அதுமத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டல் அடிப்படையில் நிர்வாகியின் உத்தரவின்பேரில் அமுல்படுத்தப்படும்இந்திய அரசியலமைப்பு சட்டம் பிரிவு ‘320’ இன் கீழ்துணைநிலை ஆளுநர் என்பவர் ஐ.ஏ.எஸ் அதிகாரிககளை நியமனம் செய்யலாம்அமைச்சரவையின் முடிவுகளை துணைநிலை ஆளுநரிடம் அனுப்பி வைக்கவேண்டும்அந்த முடிவுகள் மீது சில குறிப்புகள் காண்பிக்க மட்டுமே துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.

எப்போது துணைநிலை ஆளுநரின் வேண்டுகோள் தேவைப்படும் என்றால்அமைச்சரவையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் ஏற்படும் போது அதில் கருத்து வேறுபாடுஇருப்பின்அந்தக் கருத்து வேறுபாடு தொடர்ந்தாள் அதில் துணைநிலை ஆளுநர் தலையீடு செய்து சிறிது காலம் ஒத்தி வைக்கலாம்அது சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் ஜனாதிபதியிடம் குறிப்புகளை உடனடியாக அனுப்ப வேண்டும்இதில் ஜனாதிபதியின் முடிவே இறுதியானதுதுணைநிலை ஆளுநர் என்பவர் முந்தையமுடிவுகளில் வழிகாட்டுதல் அடிப்படையில் நடக்க வேண்டும்உச்ச நீதிமன்றம் கூறியுள்ளபடி முடிவு எடுப்பதற்கு முன் ஆழமாக ஆராய்ந்து, உணர்ந்து அரசியலமைப்புகடமைகளை நிறைவேற்ற வேண்டும்.

அரசின் அன்றாட நிகழ்வுகளில் துணைநிலை ஆளுநர்  தலையிடக்கூடாதுமாநில முதல்வர் மற்றும் அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டுத்தான் துறைச்செயலாளர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் பணியாற்ற வேண்டும்

மத்திய அரசு அல்லது துணைநிலை ஆளுநரோ எவராக இருப்பினும் ஜனநாயக கோட்பாடுகளை கருத்தில் கொண்டு உண்மையாக இருக்க வேண்டும்இல்லையெனில்ஜனநாயகம் மற்றும் குடியரசு என்பது அரசியல் அமைப்புத் திட்டத்தில் தோற்கடிக்கப்படும்.

பொதுமக்களின் புகார்களை அரசு அதிகாரிகள் தங்களின் சொந்த செல்போன் எண்களை மூலம் பெறக்கூடாது, குறை தீர்ப்பு மையத்தின் அதாவது அரசின் போன்மற்றும் இமெயில் மூலம் மட்டுமே புகார்களை பெற வேண்டும்.

அரசியலமைப்பு கோட்பாடுகள் மற்றும் பாராளுமன்ற சட்டங்களை தரம் குறைக்கக்கூடிய வேலையாக துணைநிலை ஆளுநர் தான்தோன்றித்தனமாக அதிகாரத்தைகையில் எடுக்கக்கூடாது.

மாநில சட்டப்பேரவையின் அதிகாரத்தைக் குறைத்து துணைநிலை ஆளுநரின் நிர்வாக அதிகாரத்தை உயர்த்தி அவருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கி மத்திய அரசுகடந்த 27.01.2017 மற்றும்   16.06.2017 ஆகிய நாள்களில் பிறப்பிக்கப்பட்ட இரண்டு உத்தரவுகளும் செல்லாதுஅந்த உத்தரவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று நீதிபதிமகாதேவன் பிறப்பித்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

நில அனுபவ உரிமை என்றால் ?

வேறு ஒருவருக்குச் சொந்தமான சொத்தை அதன் உரிமையாளருக்கு எதிராக, அவரின் உரிமையை மறுத்து, நீண்ட காலம் தொடர்ந்து அனுபவித்து வரும் ஒருவருக்கு அந...