Sunday, 15 June 2025

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தயகளை தடை செய்வது சம்பந்தமாக ஓன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது : உச்ச நீதிமன்றம்

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய பயன்பாடுகளை தடை சம்பந்தமாக ஓன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது : உச்ச நீதிமன்றம்

உச்ச  நீதிமன்றத்தில் , ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பந்தய பயன்பாடுகளை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த கோரி டாக்டர் கே.ஏ. பால் முன்வைத்த பொது நல மனுவை விசாரணைக்கு ஏற்று, இந்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கியது உச்ச நீதிமன்றம். நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி என்.கே. சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியதாவது, "மக்கள் தாமாகவே இதை செய்கிறார்கள், என்ன செய்ய முடியும்? கொள்கையளவில், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், இதை நிறுத்த வேண்டும்... ஆனால் சட்டம் மூலம் இதை நிறுத்த முடியும் என்று நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். 

சட்டம் இருந்தும் கொலை செய்வதை நிறுத்த முடியாதது போல." தனிப்பட்ட முறையில் ஆஜரான டாக்டர் பால், ஆன்லைன் பந்தயம் வாழ்க்கையை அழித்து வருவதாகவும், இது அரசியலமைப்பின் 21 வது பிரிவை மீறுவதாகவும் தெரிவித்தார். தெலங்காணாவில் 1023 பேர் பந்தய ஆப்ஸ் அடிமையாதல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 30  கோடி பேர் சட்டவிரோதமாக ஏமாற்றப்படுவதாக  அவர் குற்றம் சாட்டினார். பாலிவுட் மற்றும் டாலிவுட்டை சேர்ந்த 25 நடிகர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்கள் இதுபோன்ற தளங்களை ஊக்குவித்து,  மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதாகவும் அவர் கூறினார். "900 மில்லியனில், 30 கோடி பேர் சட்டவிரோதமாக ஏமாற்றப்படுவதாக... இது 21 வது பிரிவு உரிமைகள் மீறப்படுகிறது," என்று அவர் தெரிவித்தார். கிரிக்கெட் பிரபலங்களால் பந்தய ஆப்ஸ் ஊக்குவிக்கப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டி, "கிரிக்கெட் கடவுள் இதை ஊக்குவிக்கிறார்..." என்று கூறினார். டாக்டர் பால் இடைக்கால உத்தரவுகளை கோரியபோது, நீதிபதி காந்த் கூறியதாவது, "இதற்கிடையில், எதுவும் செய்ய முடியாது." ஐபிஎல் போட்டிகளின் போது, பார்வையாளர்கள் என்ற பெயரில் பந்தயம் செழிப்பாக இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். "ஐபிஎல் பார்க்கும் பெயரில், ஆயிரக்கணக்கானோர் பந்தயம் கட்டுகிறார்கள் என்பது அவருக்கு தெரியும்... இந்திய அரசு என்ன செய்கிறது என்று நாம் கேட்போம்," என்று நீதிபதி காந்த் குறிப்பிட்டார். உச்ச நீதிமன்றம் இந்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கியது மற்றும் தேவைப்பட்டால் மாநிலங்களுக்கு நோட்டீஸ் பின்னர் வழங்கப்படும் என குறிப்பிட்டது. 

வழக்கு தலைப்பு: டாக்டர் கே.ஏ. பால் @ கிலாரி ஆனந்த் Vs. இந்திய ஒன்றியம் மற்றும் பிற. (W.P.(C) எண். 299/2025)


தமிழில் 

இரா. சரவணன்

Cell:- 9994854777




No comments:

Post a Comment

வாழ்க்கைத் துணை உறவுகள்(Live-in-relationship) மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது: அலகாபாத் உயர்நீதிமன்றம்

வாழ்க்கைத் துணை உறவுகள்(Live-in-relationship) மத்தியதர வர்க்க சமூகத்தில் நிலவும் நடைமுறைக்கு எதிரானது: அலகாபாத் உயர்நீதிமன்றம் Article by V ...